கண்கள் எங்கே......... நெஞ்சமும் எங்கே…... கண்ட போதே சென்றன அங்கே.....
குறிஞ்சிப்பாட்டின் ஏழாவது பாட்டு தோழி தனக்குத்தானே தனியாக பேசிக்கொள்வது
போன்ற உத்தி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடகங்களில் இது போல ஒரு பாத்திரம்
தனிமையில் பேசிக்கொள்ளும் காட்சிகள் இருக்கும். ஆனால் ஆயிரம் பேர் இதைக் கேட்பர்.
தனக்குள் பேசிக் கொள்பவனும் உரக்கவே தன் போக்கில் பேசிக்செல்வான். இங்கு தோழியும்
அது போலவே உரக்க பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியும் கேட்க வேண்டிய
தலைவனின் காதில் தன் பேச்சு சென்று விழுமென்று. மறைவில் நிற்கும் தலைவன் தலைவியைச்
சந்திக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கும் தோழி அவனுக்கும் நன்கு
கேட்குமாறு தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். மலர் கொய்வது போலவா, இலை பறிப்பது போலவா,
நீருற்றுவது போலவா
தோழி ஏதாவது வேலை செய்து கொண்டே பேசுகிறாள்....... இதே தோழியின் தனிப்பேச்சு.







